15 Dec 2014

அங்கோர் வாட் வரலாறு - The History of Angkor Wat


அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன்விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர்  என்பது நகரத்தையும், வாட்  என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.

வரலாறு

அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில்
முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது. மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோயில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தேதியிட்டனர். ஆனால், அக்கோயிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர்

கட்டமைப்பு

இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும்விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக்காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது.மண்டபங்களின் கூரைகள்பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.


இன்றைய அங்கோர் வாட்


1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களைப் பாதுகாத்து வருகிறது. உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுப்பிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவடைந்தது, இறுதிக் கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் எனத் தெரிகிறது. 2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலைப் பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டாரம் மாசு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதைக் கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து அதனைப் பாதுகாக்க முடிவு கொண்டது.